SEO, Google Ads, Social Media, AI, funnel, career — எல்லாவற்றையும் ஒரே பக்கத்தில், எளிய தமிழில். கடைசியில் 90 நாள் கற்றல் திட்டம், checklists, templates உங்களுக்காக.
எழுதியவர்: Bala Murugan, Fulcrum Creative School · புதுப்பிக்கப்பட்டது: · படிக்க சுமார் 35 நிமிடம்
சுருக்கமான பதில்
டிஜிட்டல் மார்க்கெட்டிங் என்பது Google, Instagram, YouTube, WhatsApp, Email, website போன்ற digital சேனல்கள் வழியாக, சரியான நபருக்கு, சரியான நேரத்தில், உங்கள் பொருள் அல்லது சேவையை அறிமுகப்படுத்தி, நம்பிக்கை வளர்த்து, விற்பனையாக மாற்றுவது. இதன் தனிச்சிறப்பு: ஒவ்வொரு ரூபாய்க்கும் என்ன result வந்தது என்று அளக்க முடியும்.
95.8 கோடிஇந்திய internet பயனர்கள் (2025, IAMAI)
59%இந்திய விளம்பரச் செலவில் digital பங்கு (2025, dentsu)
70%2027-ல் digital பங்கு — கணிப்பு (dentsu)
61%Internet பயனர்களில் short video பார்ப்பவர்கள் (IAMAI)
ஒரு சின்ன உதாரணம். Gandhipuram-ல் ஒரு புதிய cake shop திறக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். பழைய முறையில் pamphlet அச்சடித்து, பேப்பரில் விளம்பரம் கொடுப்பீர்கள். யார் பார்த்தார்கள், எத்தனை பேர் வந்தார்கள் என்று தெரியாது.
இப்போது அதே கடை Google Maps-ல் தெரிகிறது. "cake shop near me" என்று தேடுபவருக்கு உங்கள் கடை, photos, reviews காட்டப்படுகிறது. Instagram-ல் ஒரு reel பார்த்தவர் WhatsApp-ல் order செய்கிறார். பிறந்தநாளுக்கு முன் ஒரு reminder message போகிறது. இவை எல்லாம் சேர்ந்தது தான் டிஜிட்டல் மார்க்கெட்டிங்.
இந்த வழிகாட்டியில் ஒவ்வொரு பகுதியையும் அடிப்படையில் இருந்து விளக்குகிறோம். உங்களுக்கு marketing பற்றி முன்னறிவு எதுவும் தேவையில்லை.
அடிப்படை
டிஜிட்டல் மார்க்கெட்டிங் என்றால் என்ன?
எளிமையாகச் சொன்னால்: மக்கள் இருக்கும் digital இடங்களில், அவர்களுக்கு உதவும் வகையில் உங்கள் business-ஐ காட்டுவது. அது Google search ஆக இருக்கலாம், Instagram feed ஆக இருக்கலாம், YouTube video ஆக இருக்கலாம், அல்லது ஒரு email ஆக இருக்கலாம்.
SEO என்பது Google போன்ற search engine-களில் உங்கள் website பணம் கொடுக்காமல் மேலே வருவதற்கான வேலைகள். யாராவது "Coimbatore-ல் best dentist" என்று தேடும்போது, உங்கள் page முதல் சில results-ல் இருந்தால், அந்த click இலவசம்.
Google Ads என்பது Google Search, YouTube, Gmail மற்றும் லட்சக்கணக்கான websites-ல் விளம்பரம் காட்டும் Google-ன் platform. பெரும்பாலும் Pay-Per-Click: யாராவது click செய்தால் தான் பணம்.
உங்கள் ad எப்போது, எந்த இடத்தில் வரும்?
ஒவ்வொரு தேடலுக்கும் Google ஒரு சின்ன "auction" நடத்துகிறது. அதிக பணம் கொடுப்பவர் மட்டும் வெல்வதில்லை. Google கணக்கிடும் Ad Rank உங்கள் bid, ad-ன் தரம் (expected CTR, ad relevance, landing page experience), தேடலின் சூழல் போன்றவற்றைப் பொறுத்தது. அதனால் நல்ல ad + நல்ல landing page = குறைந்த செலவில் நல்ல இடம்.
Google Ads flow
1
Goal Calls? Enquiries? Online sales?
2
Campaign type Search, Performance Max, YouTube, Demand Gen, Shopping
3
Keywords & audience என்ன தேடலுக்கு, எந்த இடத்தில், யாருக்கு
4
Ad + landing page தேடலுக்கு பொருந்தும் செய்தி, ஒரே goal உள்ள page
5
Conversion tracking எந்த click lead ஆனது என்று அளக்க
Social media-வில் மக்கள் தேடுவதில்லை, scroll செய்கிறார்கள். அதனால் இங்கே கவனத்தை ஈர்க்கும், பயனுள்ள, தொடர்ச்சியான content முக்கியம். Organic (இலவச posts) மற்றும் Paid (Meta Ads, YouTube Ads) — இரண்டும் உண்டு.
Platform
யாருக்கு சிறந்தது
நன்றாக வேலை செய்யும் content
Instagram
Fashion, food, salon, courses, lifestyle
Reels, carousels, stories
Facebook
உள்ளூர் business, 30+ வயதினர், groups
Offers, events, community posts
YouTube
விளக்கம் தேவைப்படும் சேவைகள், education
Tutorials, reviews, Shorts
LinkedIn
B2B, வேலைகள், professionals
Insights, case studies, hiring
WhatsApp
ஏற்கனவே தெரிந்த customers
Catalogue, updates, follow-ups
Social media workflow
1
Content pillars 3–4 தலைப்புகள்: கல்வி, behind the scenes, customer stories, offers
2
Monthly calendar எந்த நாளில் என்ன post
3
Create Canva, phone camera, எளிய editing
4
Publish & reply Comments, DMs-க்கு விரைவாக பதில்
5
Boost the best நன்றாக போன post-ஐ Meta Ads-ல் promote
6
Review மாதம் ஒருமுறை insights: reach, saves, DMs, leads
Content marketing என்பது விற்பனைக்கு முன் உதவி செய்வது. உதாரணமாக ஒரு dental clinic "பல் கூச்சம் ஏன் வருகிறது?" என்று ஒரு video போட்டால், அந்த பிரச்சினை உள்ளவர் clinic-ஐ நம்பத் தொடங்குவார்.
Instagram followers algorithm-ஐ பொறுத்து உங்கள் post-ஐ பார்க்கலாம், பார்க்காமலும் போகலாம். ஆனால் email list உங்களுடையது. அனுமதி கொடுத்தவர்களுக்கு நேரடியாக செய்தி அனுப்பலாம்.
1
List build Website form, free guide, கடையில் QR — அனுமதியுடன்
2
Welcome email யார் நீங்கள், என்ன எதிர்பார்க்கலாம்
3
Value emails Tips, updates, புதிய பொருட்கள்
4
Offer மாதம் 1–2 முறை, தெளிவான CTA
5
Measure Open rate, click rate, unsubscribe
இந்தியாவில் இதோடு சேர்த்து WhatsApp Business மிக முக்கியமான "direct" சேனல். அங்கும் அதே விதி: அனுமதி, மதிப்பு, அளவு.
Influencer Marketing
Influencer Marketing என்ன?
மக்கள் நம்பும் ஒருவர் உங்கள் பொருளைப் பற்றிப் பேசும்போது, அது விளம்பரத்தை விட அதிக நம்பிக்கை தரும். பெரிய celebrity தேவையில்லை; உள்ளூர் micro influencers (சில ஆயிரம் followers) பெரும்பாலும் சிறந்த engagement தருகிறார்கள்.
வகை
Followers (தோராயமாக)
எப்போது பயன்படுத்தலாம்
Nano
1K – 10K
உள்ளூர் கடைகள், நெருக்கமான community
Micro
10K – 1 லட்சம்
ஒரு niche: food, fashion, tech
Macro
1 லட்சம் – 10 லட்சம்
பெரிய launch, மாநில அளவு
Mega / Celebrity
10 லட்சம் +
தேசிய brand awareness
Affiliate Marketing
Affiliate Marketing என்ன?
நீங்கள் மற்றவர்களின் பொருளை உங்கள் தனிப்பட்ட link மூலம் பரிந்துரைக்கிறீர்கள். அந்த link வழியாக யாராவது வாங்கினால், உங்களுக்கு commission கிடைக்கும். Blog, YouTube, Telegram, Instagram — எங்கும் பயன்படுத்தலாம்.
1
Niche Tech, books, kitchen, fitness — உங்களுக்குத் தெரிந்த ஒன்று
2
Program Amazon Associates அல்லது brand-ன் சொந்த affiliate program
3
Honest content Review, ஒப்பீடு, எப்படி பயன்படுத்துவது
4
Disclose இது affiliate link என்று தெளிவாகச் சொல்லுங்கள்
IAMAI அறிக்கையின்படி இந்திய internet பயனர்களில் சுமார் 61% பேர் (58.8 கோடி) short video பார்க்கிறார்கள். Reels, Shorts, YouTube videos — நம்பிக்கை வளர்க்க மிக வேகமான வழி.
Short video (15–60 நொடி)
முதல் 2 நொடியில் hook. ஒரு video, ஒரு செய்தி.
Long video (5–20 நிமிடம்)
Tutorials, reviews, FAQs. YouTube search-லும் Google-லும் தெரியும்.
Live
Q&A, launches, demo. நேரடி உரையாடல்.
Local SEO
Local SEO: "near me" தேடல்களில் தெரிவது எப்படி?
"tailoring shop near me", "Coimbatore-ல் AC service" போன்ற தேடல்களில் Google Maps results (local pack) காட்டப்படும். அதில் வர Google மூன்று விஷயங்களைப் பார்க்கிறது: Relevance (பொருத்தம்), Distance (தூரம்), Prominence (பிரபலம், reviews).
Google Business Profile: சரியான category, hours, photos, services
NAP: பெயர், முகவரி, phone எல்லா இடத்திலும் ஒரே மாதிரி
Reviews: திருப்தியான customers-இடம் கேளுங்கள், எல்லாவற்றுக்கும் பதில் சொல்லுங்கள்
ChatGPT, Gemini, Claude போன்ற AI assistants மற்றும் Google Ads, Meta Ads-க்குள் உள்ள AI — இவை வேலையை வேகப்படுத்துகின்றன. ஆனால் AI-க்கு உங்கள் customer, உங்கள் ஊர், உங்கள் அனுபவம் தெரியாது. அதனால் AI draft செய்யும், மனிதர் முடிவு செய்வார்.
AI marketing workflow
1
Brief (மனிதர்) Goal, customer, tone, உண்மைகள்
2
Draft (AI) Ideas, captions, outlines, ad variations
3
Edit & fact check (மனிதர்) Facts, எண்கள், பெயர்கள், தமிழ் சரிபார்ப்பு, brand குரல்
4
Publish சரியான channel, சரியான நேரம்
5
Measure (AI + மனிதர்) Data summary AI, முடிவு மனிதர்
வேலை
AI உதவி
மனிதர் செய்ய வேண்டியது
Content
Ideas, outlines, முதல் draft
அனுபவம், உதாரணங்கள், fact check
SEO
Keyword grouping, FAQ ideas
Search intent முடிவு, இறுதி structure
Ads
Headline variations, audience ideas
Budget, claims சட்டப்படி சரியா
Design / Video
Background removal, captions, resize
Brand style, உண்மையான படங்கள்
Analytics
Report summary
என்ன மாற்றம் செய்வது என்ற முடிவு
AI prompt உதாரணங்கள் (copy செய்து பயன்படுத்தலாம்)
Content ideas
நீ ஒரு digital marketing strategist. Coimbatore-ல் உள்ள [business வகை]-க்கு, [target customer]-க்காக, அடுத்த மாதத்துக்கு 12 Instagram post ideas கொடு. ஒவ்வொன்றுக்கும் hook, format (reel/carousel/post), CTA குறிப்பிடு. பொய்யான offers அல்லது claims வேண்டாம்.
Keyword clustering
இந்த keywords list-ஐ search intent அடிப்படையில் (தகவல், ஒப்பீடு, வாங்குதல், local) groups ஆக பிரி. ஒவ்வொரு group-க்கும் ஒரு page title பரிந்துரை செய்: [keywords paste செய்யவும்]
Ad copy
[பொருள்/சேவை]-க்கு Google Search ad எழுது: 5 headlines (30 characters-க்குள்), 2 descriptions (90 characters-க்குள்). உண்மையான நன்மைகள் மட்டும்: [நன்மைகள்]. "No.1", "guaranteed" போன்ற சொற்கள் வேண்டாம்.
Report summary
இந்த மாத marketing data-வை சுருக்கமாக தமிழில் விளக்கு: எது நன்றாக வேலை செய்தது, எது இல்லை, அடுத்த மாதம் என்ன 3 மாற்றங்கள். Data: [paste]
எல்லோரும் முதல் முறை பார்த்தவுடனே வாங்குவதில்லை. Funnel என்பது ஒருவர் உங்களை தெரிந்துகொள்வது → யோசிப்பது → வாங்குவது என்ற பயணத்தின் படம். ஒவ்வொரு நிலைக்கும் வேறு content தேவை.
நிலை
Customer மனநிலை
Content / Channel
அளக்க வேண்டியது
Awareness
"இப்படி ஒன்று இருக்கா?"
Reels, blog, YouTube, awareness ads
Reach, views
Consideration
"இது எனக்கு சரியா?"
Reviews, comparison, free demo, email
Clicks, saves, enquiries
Conversion
"இப்போது வாங்கலாமா?"
Offer, WhatsApp, call, landing page
Leads, sales, cost per lead
Loyalty
"மீண்டும் வருவேன்"
Thank-you message, offers, community
Repeat purchase, referrals
Infographic
Customer Journey: ஒரு எளிய உதாரணம்
Saravanampatti-ல் இருக்கும் Priya ஒரு handmade saree கடையிலிருந்து எப்படி customer ஆகிறார் என்று பாருங்கள் (கற்பனை உதாரணம்).
1Awareness
Instagram-ல் ஒரு reel பார்க்கிறார்
Touchpoint: Reel, ad
2Interest
Profile, website பார்க்கிறார்
Touchpoint: Bio, website
3Consideration
Google reviews படிக்கிறார்
Touchpoint: Google Business Profile
4Purchase
WhatsApp-ல் கேட்டு order செய்கிறார்
Touchpoint: WhatsApp, landing page
5Experience
பொருள் பெற்று பயன்படுத்துகிறார்
Touchpoint: Packing, follow-up
6Advocacy
Review எழுதி, நண்பருக்கு பரிந்துரைக்கிறார்
Touchpoint: Review request, referral
Tools
Digital Marketing Tools: தொடக்கத்துக்கு என்ன தேவை?
பெரும்பாலான முக்கிய tools இலவசம். முதலில் இவற்றை நன்றாகக் கற்றுக்கொள்ளுங்கள்.
Tool
எதற்கு
விலை
Google Analytics 4
Website traffic, conversions அளக்க
இலவசம்
Google Search Console
Google-ல் எந்த keywords-க்கு தெரிகிறீர்கள், errors
dentsu அறிக்கையின்படி 2025-ல் இந்தியாவில் விளம்பரச் செலவில் 59% (சுமார் ₹71,621 கோடி) digital-க்கு சென்றது; 2027-ல் இது 70% ஆகும் என கணிக்கப்படுகிறது. பணம் digital-க்கு நகரும்போது, அதை சரியாக செலவழிக்கத் தெரிந்தவர்களுக்கும் தேவை வளர்கிறது.
Strategy, team, budget, எல்லா channels-ஐயும் ஒருங்கிணைத்தல்.
Freelancer / Agency owner
உள்ளூர் business-களுக்கு முழு digital சேவை.
எவ்வளவு சம்பளம் கிடைக்கும்?
உண்மையான பதில்: இது பல காரணிகளைப் பொறுத்தது. AmbitionBox-ல் பதிவான தரவின்படி (மார்ச் 2025 update), 0–5 ஆண்டு அனுபவமுள்ள Digital Marketing Executive-களின் சம்பளம் ஆண்டுக்கு சுமார் ₹1.2 லட்சம் முதல் ₹5.5 லட்சம் வரை. இது ஒரு வழிகாட்டி மட்டுமே.
காரணி
ஏன் முக்கியம்
Portfolio & results
"Ads மூலம் lead cost-ஐ 30% குறைத்தேன்" என்று காட்ட முடிந்தால் மதிப்பு அதிகம்
Specialisation
Performance marketing, SEO, analytics போன்ற ஆழமான திறன்கள்
அனுபவம்
Budget-ஐ நிர்வகித்த அனுபவம், team வழிநடத்தல்
ஊர் & நிறுவனம்
பெரிய நகரங்கள், agencies, startups, MNCs — வித்தியாசம் உண்டு
தினமும் 1–2 மணி நேரம் ஒதுக்கினால் போதும். ஒவ்வொரு கட்டத்தின் முடிவிலும் ஒரு project.
நாள் 1–30
அடித்தளம்
Marketing அடிப்படை: customer, funnel, journey
Google Business Profile, Search Console, GA4 setup (practice-க்கு)
Keyword research, on-page SEO
ஒரு free blog அல்லது practice website
Canva, captions, 12 posts
Project: ஒரு practice brand-க்கு Instagram page + 4 blog posts
நாள் 31–60
Channels
Content calendar, reels, insights
Meta Ads: objective, audience, budget
Google Ads: Search campaign, keywords, negatives
Email / WhatsApp follow-up flow
AI workflow: prompts + சரிபார்ப்பு
Project: சின்ன budget-ல் ஒரு ads test (அல்லது detailed campaign plan)
நாள் 61–90
Data & Portfolio
GA4 reports, conversions, UTM links
Looker Studio-ல் ஒரு KPI dashboard
SEO audit ஒரு உண்மையான local business-க்கு
Case study எழுதுதல்: பிரச்சினை → செய்தது → result
Google Ads / Analytics certification
Project: 3 case studies உள்ள portfolio + LinkedIn profile
Career roadmap
0–3 மாதம்அடிப்படை + portfolio
3–12 மாதம்Intern / Executive, ஒரு channel-ல் ஆழம்
1–3 ஆண்டுSpecialist: SEO, Ads அல்லது Social
3+ ஆண்டுManager, consultant அல்லது சொந்த agency
தவிர்க்க வேண்டியவை
Beginners செய்யும் 10 தவறுகள்
தவறுஎல்லா platform-லும் ஒரே நேரத்தில் தொடங்குவது
சரிஒன்று அல்லது இரண்டு channels-ல் நன்றாக செய்துவிட்டு பிறகு விரிவுபடுத்துங்கள்.
தவறுGoal இல்லாமல் post போடுவது
சரிஒவ்வொரு மாதத்துக்கும் ஒரு அளக்கக்கூடிய goal வையுங்கள் (leads, sales).
தவறுLikes-ஐ மட்டும் result என நினைப்பது
சரிLeads, cost per lead, sales ஆகியவற்றைப் பாருங்கள்.
தவறுBoost button-ஐ மட்டும் பயன்படுத்துவது
சரிAds Manager-ல் objective, audience, budget சரியாக set செய்யுங்கள்.
தவறுLanding page இல்லாமல் ads ஓட்டுவது
சரிஒரே goal உள்ள, வேகமாக load ஆகும் page-க்கு traffic அனுப்புங்கள்.
தவறுTracking set செய்யாமல் பணம் செலவழிப்பது
சரிGA4, Pixel, conversion tracking முதலில்.
தவறுAI output-ஐ check செய்யாமல் publish செய்வது
சரிFacts, பெயர்கள், எண்கள், தமிழ் வாக்கியங்களை சரிபாருங்கள்.
தவறுCopy-paste content
சரிஉங்கள் அனுபவம், உள்ளூர் உதாரணங்கள் சேர்த்து original ஆக எழுதுங்கள்.
தவறுReviews-க்கு பதில் சொல்லாமல் இருப்பது
சரிநல்லது கெட்டது எல்லா reviews-க்கும் மரியாதையாக பதில் சொல்லுங்கள்.
தவறுஒரு வாரத்தில் result எதிர்பார்ப்பது
சரிSEO, content-க்கு மாதங்கள் ஆகும்; Ads-க்கும் testing நேரம் வேண்டும்.
இலவச Resources
Checklists, Campaign Template, KPI Dashboard
இவற்றை bookmark செய்யுங்கள், print செய்யுங்கள், உங்கள் team-உடன் பகிருங்கள்.
Beginner checklist
SEO checklist
Website checklist
Social Media checklist
Google Ads checklist
0 முடிந்தது
Campaign planning template
பகுதி
கேள்வி
உதாரணம் (கற்பனை bakery)
Goal
இந்த campaign-ன் ஒரே goal என்ன?
ஒரு மாதத்தில் 60 birthday cake orders
Audience
யார், எங்கே, என்ன பிரச்சினை?
Gandhipuram, Saibaba Colony 5 km, 25–45 வயது பெற்றோர்
Offer
ஏன் இப்போது வாங்க வேண்டும்?
முன்பதிவுக்கு இலவச candles + name topper
Channels
எங்கே காட்டுவது?
Instagram reels + Meta Ads + Google Business Profile posts
Content
என்ன creatives?
3 reels, 2 carousels, 1 customer review video
Budget
எவ்வளவு, எத்தனை நாள்?
தினமும் ₹300, 30 நாள் (சோதனையாக)
KPI
எதை அளப்போம்?
WhatsApp enquiries, cost per lead, orders
Review
எப்போது சரிபார்ப்போம்?
ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும்
KPI dashboard உதாரணம்
கற்பனை எண்கள் — எப்படி படிப்பது என்று புரிந்துகொள்ள மட்டும்.
Reach48,200Instagram + ads
Clicks1,930CTR 4.0%
Leads142WhatsApp + form
Cost per lead₹63₹9,000 ÷ 142
Orders58Conversion 41%
ROAS5.2x₹46,800 ÷ ₹9,000
எப்படி படிப்பது: Reach அதிகம் ஆனால் clicks குறைவு என்றால் creative பிரச்சினை. Clicks அதிகம் ஆனால் leads குறைவு என்றால் landing page அல்லது offer பிரச்சினை. Leads அதிகம் ஆனால் orders குறைவு என்றால் follow-up பிரச்சினை.
Marketing glossary: 30 சொற்கள்
SEO
Search Engine Optimization. Google-ல் organic ஆக மேலே வர செய்யும் வேலைகள்.
SEM
Search Engine Marketing. Search-ல் பணம் செலுத்தி (Ads) மற்றும் SEO மூலம் தெரிவது.
SERP
Search Engine Results Page. நீங்கள் தேடியதும் Google காட்டும் results பக்கம்.
Keyword
மக்கள் Google-ல் type செய்யும் சொற்கள், உதா: "cake shop near me".
Backlink
மற்றொரு website-ல் இருந்து உங்கள் website-க்கு வரும் link. நம்பிக்கை சமிக்ஞை.
Organic traffic
விளம்பரம் இல்லாமல் search அல்லது social மூலம் வரும் visitors.
PPC
Pay-Per-Click. ஒவ்வொரு click-க்கும் பணம் செலுத்தும் விளம்பர முறை.
CPC
Cost Per Click. ஒரு click-க்கு சராசரியாக ஆன செலவு.
CPM
Cost Per Mille. 1,000 முறை விளம்பரம் காட்டப்பட்டதற்கான செலவு.
CTR
Click-Through Rate. பார்த்தவர்களில் எத்தனை % பேர் click செய்தார்கள்.
Impression
உங்கள் விளம்பரம் அல்லது post ஒருமுறை திரையில் காட்டப்படுவது.
Reach
குறைந்தது ஒருமுறையாவது உங்கள் content-ஐ பார்த்த தனி நபர்களின் எண்ணிக்கை.
Engagement
Like, comment, share, save போன்ற தொடர்புகள்.
Lead
Enquiry கொடுத்த, வாங்க வாய்ப்புள்ள ஒருவர் (பெயர், phone போன்றவை).
Conversion
நீங்கள் விரும்பிய செயல் நடப்பது: form fill, call, purchase.
Conversion rate
வந்தவர்களில் எத்தனை % பேர் conversion செய்தார்கள்.
CPL
Cost Per Lead. ஒரு lead பெற ஆன செலவு.
ROAS
Return On Ad Spend. விளம்பரத்துக்கு செலவான ஒவ்வொரு ₹1-க்கும் வந்த வருமானம்.
ROI
Return On Investment. மொத்த முதலீட்டுக்கு கிடைத்த லாபம்.
Funnel
Customer அறிமுகம் முதல் வாங்குவது வரை செல்லும் படிநிலைகள்.
Landing page
Ad அல்லது link click செய்ததும் வரும், ஒரே goal உள்ள page.
CTA
Call To Action. "Call now", "Book demo" போன்ற செயல் அழைப்பு.
Retargeting
முன்பு உங்கள் website-க்கு வந்தவர்களுக்கு மீண்டும் விளம்பரம் காட்டுவது.
A/B test
இரண்டு versions-ஐ ஒப்பிட்டு எது நன்றாக வேலை செய்கிறது என்று பார்ப்பது.
Algorithm
யாருக்கு எந்த content காட்டுவது என்று platform முடிவு செய்யும் விதிமுறை.
UGC
User Generated Content. Customers தாங்களே உருவாக்கும் photos, videos, reviews.
GA4
Google Analytics 4. Website data-வை அளக்கும் Google-ன் இலவச tool.
Pixel
Website-ல் வைக்கும் சின்ன code; ads-க்கு யார் என்ன செய்தார்கள் என்று சொல்லும்.
Google Business Profile
Google Search மற்றும் Maps-ல் உங்கள் கடையின் இலவச profile.
AI Overviews
சில தேடல்களுக்கு Google results மேலே காட்டும் AI சுருக்கம்.
FAQs
அடிக்கடி கேட்கப்படும் 51 கேள்விகள்
அடிப்படை
Internet, மொபைல் மற்றும் டிஜிட்டல் சேனல்கள் வழியாக ஒரு பொருள், சேவை அல்லது பிராண்டை சரியான மக்களிடம் கொண்டு சேர்ப்பதுதான் டிஜிட்டல் மார்க்கெட்டிங். Google Search, Instagram, YouTube, WhatsApp, Email, website எல்லாமே இதன் சேனல்கள்.
முதலில் உங்கள் customer யார், அவர் எங்கே நேரம் செலவிடுகிறார் என்று கண்டுபிடிக்கிறோம். பிறகு அந்த இடத்தில் (Google, Instagram, YouTube…) பயனுள்ள content அல்லது விளம்பரம் காட்டுகிறோம். அவர் click செய்து website அல்லது WhatsApp-க்கு வருகிறார். அங்கே enquiry அல்லது purchase நடக்கிறது. ஒவ்வொரு step-ஐயும் data மூலம் அளந்து மேம்படுத்துகிறோம்.
இந்தியாவில் 2025-ல் 95.8 கோடி பேர் internet பயன்படுத்துகிறார்கள் (IAMAI). மக்கள் வாங்கும் முன் Google-ல் தேடுகிறார்கள், reviews படிக்கிறார்கள், Instagram-ல் பார்க்கிறார்கள். அந்த இடத்தில் உங்கள் business இல்லையென்றால், போட்டியாளர் அந்த customer-ஐ பெறுவார்.
நடைமுறையில் மூன்றும் கிட்டத்தட்ட ஒரே அர்த்தம்தான். Digital Marketing என்பது பரந்த சொல்: internet இல்லாத digital சேனல்களும் (SMS, digital display boards) இதில் அடங்கும்.
தேவைதான். Newspaper, FM, hoarding, pamphlet இன்னும் சில customers-க்கு நன்றாக வேலை செய்கின்றன, குறிப்பாக உள்ளூர் கடைகளுக்கு. சிறந்த வழி இரண்டையும் சேர்த்து பயன்படுத்துவது: உதாரணமாக pamphlet-ல் QR code வைத்து WhatsApp-க்கு கொண்டு வருவது.
ஆம். குறைந்தபட்சம் Google Business Profile, WhatsApp Business, ஒரு Instagram பக்கம் இருந்தாலே "near me" தேடல்களில் தெரிய வாய்ப்பு அதிகம். பெரிய பணம் தேவையில்லை; தொடர்ச்சியான முயற்சி தான் முக்கியம்.
Channels
SEO (Search Engine Optimization) என்பது Google போன்ற search engine-களில் உங்கள் website பணம் கொடுக்காமல் (organic) மேலே வர உதவும் வேலைகள்: சரியான keywords, நல்ல content, வேகமான website, நம்பகமான backlinks.
பொதுவாக 3 முதல் 6 மாதங்கள், போட்டி அதிகமான keywords-க்கு அதற்கும் மேல். யாரும் ranking-ஐ guarantee செய்ய முடியாது; "1 வாரத்தில் முதல் இடம்" என்று சொல்பவர்களிடம் கவனமாக இருங்கள்.
Google Ads என்பது Google Search, YouTube, Gmail மற்றும் பல websites-ல் பணம் கொடுத்து விளம்பரம் காட்டும் Google-ன் platform. பொதுவாக யாராவது click செய்தால் தான் பணம் (Pay-Per-Click).
இரண்டும் வேறு வேலை செய்கின்றன. Ads உடனடி traffic தரும், ஆனால் பணம் நிறுத்தினால் traffic நிற்கும். SEO மெதுவாக வளரும், ஆனால் நீண்ட காலம் பலன் தரும். பல business-கள் தொடக்கத்தில் Ads, கூடவே SEO என இரண்டையும் பயன்படுத்துகின்றன.
Instagram, Facebook, YouTube, LinkedIn, WhatsApp போன்ற platforms-ல் content போட்டும், விளம்பரம் செய்தும், மக்களுடன் உரையாடியும் brand-ஐ வளர்ப்பது Social Media Marketing.
Facebook, Instagram, Messenger, WhatsApp-ல் விளம்பரம் காட்ட Meta வழங்கும் platform. வயது, இடம், ஆர்வம் போன்றவற்றை வைத்து சரியான மக்களுக்கு விளம்பரம் காட்டலாம்.
நேரடியாக "வாங்குங்கள்" என்று சொல்லாமல், பயனுள்ள blog, video, reel, guide மூலம் மக்களுக்கு உதவி, அவர்களின் நம்பிக்கையைப் பெறுவது Content Marketing. நம்பிக்கை வந்த பிறகு விற்பனை எளிதாகும்.
ஆம், குறிப்பாக ஏற்கனவே உங்களைத் தெரிந்த customers-க்கு. Email list உங்கள் சொந்த சொத்து; Instagram algorithm மாறினாலும் அது உங்களிடமே இருக்கும். அனுமதி (consent) பெற்ற பிறகே அனுப்ப வேண்டும்.
மக்கள் நம்பும் creators மூலம் உங்கள் பொருளை அறிமுகப்படுத்துவது. இந்தியாவில் ASCI வழிகாட்டுதல்களின்படி paid அல்லது gift பெற்ற post-களில் #ad, #collab போன்ற தெளிவான label இருக்க வேண்டும்.
மற்றொருவரின் பொருளை உங்கள் தனிப்பட்ட link மூலம் பரிந்துரைத்து, விற்பனை நடந்தால் commission பெறுவது. Amazon Associates போன்ற programs பிரபலம்.
"near me" மற்றும் "Coimbatore-ல் …" போன்ற உள்ளூர் தேடல்களில், Google Maps-ல் உங்கள் business தெரிய செய்யும் வேலை. Google Business Profile, reviews, சரியான முகவரி மற்றும் phone number இதன் அடிப்படை.
ஆம். WhatsApp Business-ல் catalogue, quick replies, labels பயன்படுத்தலாம். அனுமதி கொடுத்தவர்களுக்கு மட்டும் offers அனுப்புங்கள்; அதிகமாக அனுப்பினால் மக்கள் block செய்வார்கள்.
AI
Content ideas, caption drafts, keyword clustering, ad copy variations, image மற்றும் video edit, data summary போன்றவற்றை AI வேகப்படுத்துகிறது. ஆனால் இறுதி முடிவு, fact check, brand குரல் — இவை மனிதரிடம் தான் இருக்க வேண்டும்.
சில repetitive வேலைகள் குறையும். ஆனால் strategy, creativity, customer புரிதல், AI-யை சரியாக பயன்படுத்தும் திறன் உள்ளவர்களுக்கு தேவை தொடர்கிறது. AI-யை கற்றுக்கொண்டவர்கள் அதிக வேலையை குறைந்த நேரத்தில் செய்கிறார்கள்.
AI-யால் எழுதப்பட்டது என்பதற்காக மட்டும் Google தண்டிப்பதில்லை. பயனுள்ள, துல்லியமான content-ஐயே Google மதிக்கிறது. ஆனால் ranking-ஐ ஏமாற்ற மொத்தமாக தரமற்ற pages உருவாக்குவது spam policy-க்கு எதிரானது.
சில தேடல்களுக்கு Google results-ன் மேலே AI உருவாக்கிய சுருக்கமான பதிலும், அதற்கான source links-உம் காட்டப்படுகின்றன. தெளிவான, நம்பகமான பதில் தரும் pages அந்த links-ல் வர வாய்ப்பு உண்டு.
Career
Internet பயன்பாடும் digital விளம்பரச் செலவும் வளர்ந்து வருவதால் தேவை தொடர்ந்து உள்ளது. ஆனால் certificate மட்டும் போதாது; உண்மையான projects, results காட்டும் portfolio, தொடர்ந்து கற்கும் மனநிலை இருந்தால் தான் நல்ல வளர்ச்சி.
இது திறமை, அனுபவம், ஊர், நிறுவனம் மற்றும் portfolio-வைப் பொறுத்தது. AmbitionBox-ல் பதிவான தரவின்படி (மார்ச் 2025 update) 0–5 ஆண்டு அனுபவமுள்ள Digital Marketing Executive-களின் சம்பளம் ஆண்டுக்கு சுமார் ₹1.2 லட்சம் முதல் ₹5.5 லட்சம் வரை. இது ஒரு வழிகாட்டி மட்டுமே, உத்தரவாதம் அல்ல.
SEO Executive, Social Media Executive, Performance Marketer (Google/Meta Ads), Content Writer, Email Marketing Executive, Digital Marketing Executive, Analytics Executive, Marketing Manager, மேலும் Freelancer அல்லது சொந்த agency.
முடியும். உள்ளூர் கடைகள், clinics, institutes, restaurants-க்கு Google Business Profile, Instagram, Ads சேவைகள் தேவை. 2–3 நல்ல case studies இருந்தால் முதல் clients கிடைப்பது எளிது.
SEO, content, social media, ads போன்ற பல வேலைகளை remote ஆக செய்யலாம். ஆனால் fresher-களுக்கு முதல் வேலை பெரும்பாலும் office-ல் இருந்தால் கற்றல் வேகமாக இருக்கும்.
dentsu அறிக்கையின்படி 2025-ல் இந்திய விளம்பரச் செலவில் 59% digital-க்கு சென்றது; 2027-ல் 70% ஆகும் என கணிக்கப்படுகிறது. AI, short video, local search ஆகியவை அடுத்த சில ஆண்டுகளின் முக்கிய போக்குகள்.
யார் கற்கலாம்
மாணவர்கள், freshers, வேலை தேடுபவர்கள், business owners, கடை உரிமையாளர்கள், freelancers, content creators, YouTubers — basic computer மற்றும் smartphone பயன்படுத்தத் தெரிந்த யார் வேண்டுமானாலும்.
தேவையில்லை. Arts, Science, Engineering, Diploma — எந்த பின்னணியில் இருந்தும் கற்கலாம். ஆர்வம், practice, மக்களைப் புரிந்துகொள்ளும் திறன் தான் முக்கியம்.
முடியும். Tools-ன் பெயர்கள் ஆங்கிலத்தில் இருக்கும், ஆனால் கருத்துகளை தமிழில் கற்கலாம். தமிழ் content-க்கும் தமிழ் பேசும் customers-க்கும் இப்போது நிறைய தேவை உள்ளது.
இல்லை. Website-ஐ WordPress போன்ற tools மூலம் coding இல்லாமல் உருவாக்கலாம். Basic HTML தெரிந்தால் SEO-ல் கொஞ்சம் உதவும், ஆனால் கட்டாயமில்லை.
ஆம், கண்டிப்பாக. அடிப்படை தெரிந்தால் agency-யிடம் சரியான கேள்விகள் கேட்கலாம், பணம் வீணாவதைத் தவிர்க்கலாம், சிறிய வேலைகளை நீங்களே செய்யலாம்.
கற்றல்
சுயமாகவும் கற்கலாம்: Google Skillshop, Meta Blueprint போன்ற இலவச resources உள்ளன. Course-ன் பலன்: ஒழுங்கான பாடத்திட்டம், trainer feedback, live projects, placement support. உங்களுக்கு discipline இருந்தால் சுயகற்றல்; வழிகாட்டுதல் தேவைப்பட்டால் course.
அடிப்படையை 90 நாட்களில் கற்கலாம் (இந்தப் பக்கத்தில் உள்ள plan பாருங்கள்). வேலைக்குத் தயாராக, projects-உடன் 3–6 மாதங்கள் ஆகும். அதன் பிறகு கற்றல் தொடர்ந்துகொண்டே இருக்கும்.
Marketing அடிப்படை (customer, funnel), பிறகு SEO மற்றும் Google Business Profile, பிறகு Social Media, பிறகு Google Ads மற்றும் Meta Ads, கடைசியாக Analytics. ஒவ்வொன்றையும் ஒரு சின்ன project மூலம் practice செய்யுங்கள்.
பெரும்பாலான practice இலவசம்: ஒரு free blog, Instagram page, Google Business Profile, Search Console. Ads practice-க்கு ஒரு நாளைக்கு சில நூறு ரூபாய் போதும்.
Google Ads, Google Analytics, Meta போன்ற certifications உங்கள் அறிவைக் காட்ட உதவும். ஆனால் வேலை கொடுப்பவர்கள் அதிகம் பார்ப்பது நீங்கள் செய்த projects மற்றும் அவற்றின் results-ஐ.
நீங்கள் வளர்த்த ஒரு Instagram page அல்லது blog, ஒரு SEO audit, ஒரு Ads campaign plan அல்லது result screenshot, ஒரு content calendar, ஒரு சின்ன KPI report. ஒவ்வொன்றிலும் பிரச்சினை → நீங்கள் செய்தது → result என்று எழுதுங்கள்.
Tools
தொடக்கத்துக்கு இலவச tools போதும்: Google Analytics 4, Google Search Console, Google Business Profile, Google Keyword Planner, Meta Business Suite, Canva, ஒரு AI assistant. பிறகு தேவைப்பட்டால் Semrush போன்ற paid tools.
Instagram, WhatsApp, Google Business Profile மட்டும் வைத்தும் தொடங்கலாம். ஆனால் சொந்த website இருந்தால் SEO, Ads tracking, நம்பகத்தன்மை எல்லாம் மேம்படும். இது நீண்ட கால சொத்து.
உங்கள் website-க்கு எத்தனை பேர், எங்கிருந்து வருகிறார்கள், என்ன செய்கிறார்கள், எத்தனை enquiries வருகின்றன என்று காட்டும். இப்போதைய version Google Analytics 4 (GA4).
Key Performance Indicator: உங்கள் marketing வேலை செய்கிறதா என்று அளக்கும் முக்கிய எண்கள். உதாரணம்: leads எண்ணிக்கை, cost per lead, conversion rate, ROAS.
பணம் & Results
Organic வேலைகளுக்கு (SEO, content, Google Business Profile) நேரம் தான் முக்கிய முதலீடு. Ads-க்கு சின்ன budget-ல் தொடங்கி, எது lead கொண்டு வருகிறது என்று பார்த்து அதிகரியுங்கள். ஒரே நாளில் பெரிய தொகை செலவழிக்காதீர்கள்.
முதலில் ஒரு தெளிவான goal வையுங்கள் (உதாரணம்: மாதம் 50 enquiries). பிறகு அதற்கான KPI-களை GA4, Ads dashboard, WhatsApp labels மூலம் வாரந்தோறும் பாருங்கள். Likes மட்டும் result அல்ல.
வேண்டாம். போலி followers engagement-ஐ குறைக்கும், algorithm reach-ஐ குறைக்கும், brand நம்பகத்தன்மையை கெடுக்கும். 500 உண்மையான followers, 50,000 போலி followers-ஐ விட மதிப்பானவர்கள்.
கூடாது. Google-ன் policies-க்கு எதிரானது; reviews நீக்கப்படலாம், profile-க்கு கட்டுப்பாடு வரலாம். திருப்தியான customers-இடம் நேர்மையான review கேளுங்கள்.
சட்டம் & நம்பிக்கை
இந்தியாவின் Digital Personal Data Protection Act, 2023 மற்றும் DPDP Rules, 2025 படி, personal data சேகரிக்க தெளிவான அனுமதி பெற வேண்டும், எதற்கு பயன்படுத்துகிறீர்கள் என்று சொல்ல வேண்டும், பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்.
கூடாது. ASCI வழிகாட்டுதல்கள் படி influencer அல்லது brand collaboration post-களில் அது விளம்பரம் என்று தெளிவாக குறிப்பிட வேண்டும். வெளிப்படைத்தன்மை நம்பிக்கையை வளர்க்கும்.
எச்சரிக்கையாக இருங்கள். Google ranking-ஐ யாரும் உத்தரவாதம் தர முடியாது என்று Google-ஏ சொல்கிறது. என்ன வேலை செய்வார்கள், எப்படி report தருவார்கள் என்று கேளுங்கள்.
Fulcrum
முடியும். Fulcrum Creative School, Gandhipuram-ல் 4 மாத Digital Marketing course-ஐ தமிழ் விளக்கத்துடன் classroom மற்றும் live online ஆக நடத்துகிறது. கட்டணத்துக்கு அழைக்கவும்: +91 93608 99780 · EMI 6 மாதம் வரை.
சுருக்கம்
முக்கிய குறிப்புகள் (Key Takeaways)
டிஜிட்டல் மார்க்கெட்டிங் = சரியான நபர் + சரியான செய்தி + சரியான channel + அளவீடு.
SEO நீண்ட கால, இலவச traffic; Google Ads உடனடி, பணம் செலுத்தும் traffic. இரண்டும் சேர்ந்து சிறப்பு.
Social media-வில் தொடர்ச்சி முக்கியம்; likes அல்ல, leads மற்றும் sales தான் result.
Local business-க்கு Google Business Profile மற்றும் reviews தான் முதல் வேலை.
AI வேகம் தரும்; ஆனால் facts, brand குரல், இறுதி முடிவு மனிதரிடம்.
Funnel மற்றும் customer journey-ஐ புரிந்துகொண்டால், எந்த நிலையில் customer விலகுகிறார் என்று தெரியும்.
Career-க்கு certificate-ஐ விட portfolio மற்றும் results முக்கியம்.
90 நாள் திட்டத்தை பின்பற்றுங்கள்: கற்றல் + practice + case study.
Fulcrum Creative School-ல் digital marketing மற்றும் SEO பற்றி எழுதுகிறார். இந்த வழிகாட்டி Google, Meta, IAMAI, dentsu போன்ற ஆதாரங்களைக் கொண்டு சரிபார்க்கப்பட்டது.
Social Media Marketing என்ன?
Social media-வில் மக்கள் தேடுவதில்லை, scroll செய்கிறார்கள். அதனால் இங்கே கவனத்தை ஈர்க்கும், பயனுள்ள, தொடர்ச்சியான content முக்கியம். Organic (இலவச posts) மற்றும் Paid (Meta Ads, YouTube Ads) — இரண்டும் உண்டு.
Social media workflow
மேலும்: Social Media Marketing course · Meta Ads course