Interior Design Course கோயம்புத்தூர் — தமிழில், plan முதல் site வரை
ஒரு வீட்டை அளந்து, furniture எங்கே வரணும்னு திட்டமிட்டு, AutoCAD-ல் drawing போட்டு, SketchUp, 3ds Max-ல் 3D model பண்ணி, V-Ray-ல் client-க்கு photo போல render காட்டி, carpenter-க்கு working drawings கொடுப்பது வரை — முழு interior design-ஐ கத்துக்கோங்க. முன் அனுபவம் தேவையில்லை.
- Space Planning
- AutoCAD
- SketchUp Pro
- 3ds Max
- V-Ray
- Working Drawings
- BOQ
- AI Tools
- 2BHK + Commercial Projects
- V-Ray Day & Night Renders
- Placement Support
- தமிழ் & English
- 6 மாதம் வரை EMI
Interior Design Course — முக்கிய விவரங்கள்
- Duration
- 5 மாதம் · 20 வாரம் · 150+ மணி
- Offline Training
- காந்திபுரம் classroom lab
- Online
- Google Meet live · recordings · doubt sessions
- Batches
- Weekday காலை / மாலை · Weekend (Sat–Sun)
- Practical Projects
- ஒவ்வொரு module-ம் ஒரு drawing / model / render
- Design Projects
- முழு 2BHK வீடு + commercial space (capstone)
- Portfolio
- Plans, render set, walkthrough, drawing set
- Career Guidance
- Design tests, mock interviews, placement support
- தகுதி
- 12th-க்கு பிறகு · அனுபவம் தேவையில்லை
- Fees
- அழைத்து கேளுங்க · 6 மாதம் வரை EMI
English-ல் முழு syllabus, "One room, three software" demo: Interior Design Course in Coimbatore · கட்டணம்: Interior design course fees
Interior Design என்றால் என்ன?
ஒரு இடத்தில் வாழும், வேலை செய்யும் மனிதர்களுக்கு அது வசதியா, பாதுகாப்பா, அழகா இருக்கணும் — அதற்காக இடத்தை திட்டமிடுவது தான் interior design. "அழகு" கடைசி படி; முதல் கேள்வி "இந்த இடம் எப்படி பயன்படும்?"
வீடுகள்
2BHK-ல் ஒவ்வொரு அடியும் முக்கியம் — storage, சமையலறை workflow, குழந்தைகள் அறை.Villas
Double-height living, staircase, பெரிய windows-க்கு ஏத்த lighting & ceiling.Apartments
Fixed walls, plumbing points — அதற்குள் smart layout, modular furniture.Offices
Workstations, cabins, meeting rooms, cable management, acoustic.Shops
Textile, jewellery showrooms — product display, customer flow, billing இடம்.Restaurants & Cafes
Seating எண்ணிக்கை, kitchen-service flow, mood lighting.Hotels
Lobby, guest rooms — நீடிக்கும் materials, எளிதில் சுத்தம்.Clinics
Waiting, consultation, சுத்தம் எளிதான surfaces, privacy.ஆழமான அறிமுகத்துக்கு: What is Interior Design? · How to become an interior designer
Interior Design vs Interior Decoration
பல beginners இரண்டும் ஒன்று என்று நினைக்கிறாங்க. எளிய சோதனை: சுவர்களை தொடாமல் மாற்ற முடிவது decoration; வேலை ஆரம்பிக்கும் முன் drawing வேண்டியது design.
📐 Interior Design
இடம் எப்படி வேலை செய்யும் என்று முடிவு
- Space planning — எந்த அறையில் என்ன
- Functionality — நடைபாதை, storage, ergonomics
- Lighting plan — எந்த light எங்கே, எதற்கு
- Electrical layout — switches, sockets, AC points
- Furniture planning — அளவு, இடம், clearance
- False ceiling, kitchen, wardrobe design
- Working drawings & BOQ
🎨 Interior Decoration
இடம் எப்படி தோற்றமளிக்கும் என்று அலங்காரம்
- Curtains, blinds
- Loose furniture தேர்வு
- Decor பொருட்கள், artwork
- Accessories — cushions, rugs, plants
- Wall colours, wallpaper
Interior Design ஏன் கத்துக்கணும்?
கோவையில் புதிய apartments, independent வீடுகள், IT corridor offices, textile & jewellery showrooms, cafes — நன்கு திட்டமிட்ட, செலவை கட்டுப்படுத்தும் interiors-க்கு தேவை வளர்கிறது.
🎨 Creative Career
ஒவ்வொரு project-ம் புதிய இடம், புதிய client, புதிய பிரச்சனை.🏠 Residential Projects
புதிய வீடுகள், renovation, modular kitchen, wardrobes.🏢 Commercial Projects
Offices, shops, clinics, restaurants.💻 Freelancing
Plans, 3D renders-ஐ studios, builders-க்கு freelance-ஆ.🤝 Consultancy
Layout ஆலோசனை, material தேர்வு, budget planning.🚀 Entrepreneurship
Modular furniture, turnkey interiors business.🏛️ Design Studio
அனுபவத்துக்கு பின் சொந்த studio, team.🔨 Home Renovation
பழைய வீடுகளை மாற்றி அமைப்பதற்கான தேவை தனி market.யார் சேரலாம்? — உங்களுக்கு எது பொருந்தும்?
பொதுவா 12th-க்கு பிறகு. Drawing, design அனுபவம் தேவையில்லை; அடிப்படை computer பழக்கம் போதும்.
| நீங்கள் | இந்த course தரும் பலன் | கவனம் செலுத்த வேண்டியது |
|---|---|---|
| 12th / Diploma / Degree மாணவர் | 5 மாதத்தில் portfolio-வுடன் career தொடக்கம் | தினசரி software practice |
| Civil Engineering மாணவர் | Drawing அறிவோடு 3D, rendering, interiors | Design sense, materials |
| Architecture ஆர்வலர் | Architecture படிக்கும் முன் / பின் practical interiors | Interiors vs architecture எல்லை |
| 10th மாணவர் | Counselling-ல் சரியான நேரம், வழி | முதலில் 12th / diploma பரிந்துரை |
| Homemaker | வீட்டிலிருந்தே freelance, consultancy | Weekend / online batch |
| வேலை பார்ப்பவர் / Career changer | Weekend batch-ல் புதிய career | Portfolio-க்கு நேரம் ஒதுக்கல் |
| Furniture owner / Contractor / Carpenter | 3D render காட்டி orders; துல்லியமான drawings | AutoCAD + SketchUp முதன்மை |
| Entrepreneur | Turnkey interiors, modular business புரிதல் | BOQ, costing, client handling |
Course முடிவில் உங்க கையில் இருக்கும் 12 Skills
Design Principles
Balance, proportion, rhythm, focal point.
Space Planning
Zoning, circulation, ergonomics.
Furniture Layout
சரியான அளவு, clearance, placement.
Colour Theory
60-30-10, mood, ஒளிக்கு ஏற்ப நிறம்.
Lighting Design
Ambient, task, accent; lux, colour temperature.
Material Selection
Plywood, laminates, stone, tiles — இடத்துக்கு ஏற்ப.
Ceiling Design
Gypsum false ceiling, cove lights, levels.
Kitchen Design
Work triangle, modular units, appliances.
Wardrobe Design
Hinged vs sliding, internal storage plan.
Bathroom Planning
Wet & dry zones, fixtures clearance.
Working Drawings
Site, carpenter, electrician-க்கான drawings & BOQ.
Client Presentation
Renders, boards, walkthrough, proposal.
Software — பெயர் மட்டும் இல்லை, எது எதற்கு என்று
Interior studios வேலை செய்யும் அதே வரிசை: அளந்த plan → 3D concept → detailed model → render → drawings.
| Software | Project-ல் வேலை | நீங்க உருவாக்குவது | Module |
|---|---|---|---|
| AutoCAD | Drafting — துல்லியமான அளவுகளுடன் 2D | Floor plan, furniture layout, elevations, ceiling & electrical plans, working drawings | 02, 06 |
| SketchUp Pro + LayOut | வேகமான 3D concept — client-உடன் design-ஐ இறுதி செய்ய | Room models, custom furniture, scenes, walkthrough, presentation sheets | 03 |
| 3ds Max | Detailed modelling, camera, scene setup | Furniture & decor models, render-ready scenes | 04 |
| V-Ray | Photo-real rendering | Wood, marble, glass materials; day & night renders; render passes | 05 |
| AI tools | Ideas & presentation வேகம் | Midjourney mood boards, RoomGPT redesigns, Chaos Veras concept renders, Adobe Firefly render edits, ChatGPT proposals | 07 |
20 வார Learning Roadmap — 8 Modules
ஒரு உண்மையான project போலவே: brief → plan → model → render → drawings → handover.
- வாரம் 1–2 · Module 01
Design Fundamentals & Space Planning
- Elements & principles of design, colour, texture, materials
- Ergonomics, furniture அளவுகள்
- Vastu அடிப்படை, hand sketching
- வாரம் 3–5 · Module 02
AutoCAD 2D Drafting
- Walls, doors, windows உடன் floor plans
- Furniture layout, zoning
- Sections, elevations, ceiling plans, scales, plotting
- வாரம் 6–8 · Module 03
SketchUp Pro Modelling
- Rooms, custom furniture, materials, components
- Scenes, walkthroughs, LayOut sheets
- வாரம் 9–11 · Module 04
3ds Max Modelling
- Editable poly, splines, furniture & decor
- Cameras, composition, scene setup
- வாரம் 12–14 · Module 05
V-Ray Rendering
- Wood, marble, glass materials
- Sun, sky, HDRI; day & night renders; Light Mix, render passes
- வாரம் 15–16 · Module 06
Working Drawings & BOQ
- Modular kitchen, wardrobe detailing
- False ceiling, electrical layouts, material schedules
- Quantity & cost estimates
- வாரம் 17–18 · Module 07
AI Interior Tools
- Midjourney, RoomGPT, Planner 5D, Chaos Veras, ChatGPT
- வாரம் 19–20 · Module 08
Portfolio & Career Launch
- Capstone: முழு 2BHK வீடு + commercial space
- Render set, walkthrough, portfolio, mock tests, placement drive
Weekend அல்லது online-ஆ? Weekend batch · Online live batch — இரண்டும் அதே 5 மாத syllabus.
ஒரு Interior Project உருவாகும் 11 படிகள்
ஒவ்வொரு படியையும் தொட்டு பாருங்க — என்ன நடக்கும், என்ன output, எந்த tool.
Space Planning Guide — இடத்தை பிரிக்கும் முறை
Furniture வாங்கும் முன் இடத்தை zones-ஆ பிரித்து, நடக்கும் பாதையை முதலில் வரைவது தான் நல்ல layout-ன் ரகசியம்.
1. Zoning
Public (living, dining), private (bedrooms), service (kitchen, utility, bath). Guest வந்தா bedroom வழியா போக வேண்டியிருக்கக் கூடாது.2. Circulation
முக்கிய நடைபாதை சுமார் 3 அடி (900 mm), சின்ன இடங்களில் குறைந்தது 2 அடி. கதவு திறக்கும் வளைவில் furniture வைக்காதீங்க.3. Ergonomics
Counter, table, wardrobe rod உயரம் — பயன்படுத்துபவரின் உயரத்துக்கு. "Standard" ஆரம்பப் புள்ளி மட்டுமே.4. Light & air
ஜன்னல்களை furniture மறைக்கக் கூடாது. Work table-க்கு இயற்கை ஒளி பக்கவாட்டில் வருவது நல்லது.5. Services first
Plumbing, AC, electrical points-ஐ layout-ஓடு சேர்த்து முடிவு செய்யுங்க — பிறகு சுவரை உடைப்பது செலவு.6. Storage
ஒவ்வொரு அறைக்கும் "என்ன வைக்கணும்" பட்டியல் — பிறகு தான் wardrobe, loft, TV unit அளவு.✅ Space Planning Checklist
Furniture Layout Guide + Bedroom Room Planner
அறை அளவையும் bed அளவையும் மாற்றி பாருங்க — பக்கத்து, கால் பக்க நடைபாதை போதுமா என்று plan-ஏ சொல்லும்.
விதிகள் (பொதுவான வழிகாட்டல்): bed பக்கத்தில் குறைந்தது 2′, நல்லது 2′6″+. Hinged wardrobe கதவு திறக்க முன்னால் சுமார் 3′; sliding-க்கு 2′6″ போதும். Site-ல் கதவு, ஜன்னல், AC இடம் பார்த்து இறுதி முடிவு.
பொதுவான Furniture அளவுகள் — Indian homes-க்கு ஆரம்பப் புள்ளி
| Furniture | பொதுவான அளவு | சுற்றி தேவையான இடம் |
|---|---|---|
| Queen bed | 5′ × 6′6″ (1525 × 1980 mm) | பக்கங்களில் 2′–2′6″ |
| Wardrobe | ஆழம் 2′ (600 mm), உயரம் 7′ + loft | Hinged முன் ~3′ · sliding ~2′6″ |
| 3-seater sofa | ஆழம் 2′6″–3′ | Coffee table-க்கு 1′4″–1′6″ இடைவெளி |
| 4-seater dining | 3′ × 4′ table | Chair பின்னால் 2′6″–3′ |
| Study table | உயரம் 2′5″–2′6″, ஆழம் 2′ | Chair-க்கு பின்னால் 3′ |
| TV viewing | Screen மையம் கண் மட்டத்தில் (உட்கார்ந்த நிலை) | தூரம் screen அளவு பொறுத்து |
Material Selection Guide — எந்த இடத்துக்கு எந்த material?
இடத்தை தேர்ந்தெடுங்க — பொருத்தமான materials மட்டும் highlight ஆகும். "சிறந்த material" இல்லை; இடம், budget, பராமரிப்புக்கு "சரியான material" தான்.
| Material | எதுக்கு | பலம் | கவனிக்க | Budget |
|---|---|---|---|---|
| BWP / Marine plywood | Kitchen, sink unit, bathroom vanity | ஈரப்பதம் தாங்கும் | Grade, ISI marking சரிபாருங்க | ₹₹₹ |
| MR plywood | Wardrobe, TV unit, beds | உறுதி, screws பிடிக்கும் | தண்ணீர் படும் இடத்துக்கு வேண்டாம் | ₹₹ |
| MDF / HDHMR | Shutters, CNC design panels | மென்மையான surface, design வெட்டலாம் | MDF ஈரம் தாங்காது; HDHMR சிறந்தது | ₹–₹₹ |
| Laminate (HPL) | Shutters finish | கீறல் தாங்கும், பல design | Edge banding தரம் முக்கியம் | ₹ |
| Acrylic / PU finish | Glossy kitchen, wardrobe shutters | Premium look | Fingerprints, கீறல் தெரியும் | ₹₹₹ |
| Veneer | TV wall, wall panels, doors | இயற்கை மரத் தோற்றம் | Polish பராமரிப்பு வேண்டும் | ₹₹₹ |
| Granite | Kitchen countertop | உறுதி, சூடு தாங்கும், எளிதில் கிடைக்கும் | Joint இடங்களை முன்பே திட்டமிடுங்க | ₹₹ |
| Quartz | Countertop, vanity | Stain குறைவு, சீரான நிறம் | நேரடி அதிக சூடு வேண்டாம் | ₹₹₹ |
| Vitrified tiles | Floors | பராமரிப்பு எளிது, பல அளவுகள் | Bathroom-க்கு anti-skid | ₹–₹₹ |
| Anti-skid ceramic tiles | Bathroom floor | வழுக்காது | Grout lines சுத்தம் | ₹ |
| Marble / Italian marble | Living floor, feature wall | Luxury look | கறை, polish பராமரிப்பு | ₹₹₹₹ |
| Gypsum board | False ceiling | மென்மையான finish, cove lights | ஈரமான இடங்களுக்கு moisture-resistant board | ₹₹ |
| PVC / WPC panels | Bathroom ceiling, ஈரமான சுவர்கள் | தண்ணீர் தாங்கும் | தோற்றம் simple | ₹ |
| Wallpaper / texture paint | Feature wall | குறைந்த செலவில் மாற்றம் | ஈரச் சுவரில் வேண்டாம் | ₹ |
₹ குறியீடுகள் ஒப்பீட்டு அளவு மட்டுமே; உண்மையான விலை brand, grade, நேரம் பொறுத்து மாறும் — BOQ தயாரிக்கும் போது supplier quote வாங்குங்க.
Lighting Planning Guide + Lumens Calculator
நல்ல lighting = மூன்று அடுக்கு: Ambient (பொது வெளிச்சம்), Task (வேலைக்கு — counter, study), Accent (cove, wall washer, artwork).
Rule of thumb: lumens = lux × பரப்பு (m²). 1 m² ≈ 10.76 sq ft. ஒரு 9W LED downlight சுமார் 800 lumens என்று கணக்கு — product-க்கு ஏத்தபடி மாறும்; datasheet பாருங்க. Ceiling உயரம், சுவர் நிறம் பொறுத்து மாற்றம் தேவை.
💡 Lighting Design Checklist
Colour Combination Guide — 60·30·10 விதி
60% முதன்மை நிறம் (சுவர், floor), 30% இரண்டாம் நிறம் (furniture, curtains), 10% accent (cushions, art). கீழே உள்ள combinations-ஐ ஆரம்பப் புள்ளியா பயன்படுத்துங்க.
Kitchen Design Checklist & Bedroom Planning Guide
🍳 Kitchen Design Checklist
🛏️ Bedroom Planning Guide
அளவுகள் பொதுவான industry வழிகாட்டல்கள்; site, client உயரம், appliances பொறுத்து trainer உங்களுக்கு சரிசெய்ய சொல்லித் தருவார்.
Practical Training — Residential, Commercial, Site Workflows
வகுப்பில் நீங்க செய்யப்போகும் வேலை: bedroom, living, kitchen, office, restaurant, retail — 2D drafting, 3D modelling, rendering, presentation boards.
🏠 Residential Design Workflow
- குடும்ப brief & lifestyle கேள்விகள்
- Site measurement, photos
- Zoning, furniture layout (2–3 options)
- Kitchen, wardrobe, TV unit design
- Ceiling, lighting, electrical plan
- SketchUp concept → V-Ray renders
- Working drawings, BOQ, approval
- Execution, handover
🏢 Commercial Design Workflow
- Business brief — staff, customers, brand
- Building rules, fire exits, services
- Customer / staff flow planning
- Branding: colours, signage, display
- Lighting: display, task, mood
- 3D + renders for approval
- Phased drawings — business நிற்காமல் வேலை
- Vendor coordination, timelines
🔨 Site Execution Workflow
- Site marking — drawings-படி
- Civil, plumbing மாற்றங்கள்
- Electrical conduits, AC piping
- False ceiling framework
- Flooring, wall finishes
- Carpentry install
- Painting, lights, fixtures
- Snag list, cleaning, handover
Client Meeting, Site Measurement & Presentation Checklists
Tick பண்ணி பயன்படுத்துங்க. கீழே உள்ள button இந்தப் பக்கத்தின் எல்லா checklists-ஐயும் ஒரே Interior Planning Checklist PDF-ஆ தரும்.
🤝 Client Meeting Checklist
📏 Site Measurement Checklist
🖥️ Client Presentation Checklist
Interior Portfolio Building Guide
Studio, builder, client — எல்லாரும் முதலில் கேட்பது "உங்க work காட்டுங்க". Module 08-ல் இவை எல்லாம் ஒரு PDF portfolio-ஆ தயாராகும்.
📁 Interior Portfolio Checklist
Portfolio-வை வலுவாக்க 5 tips
- ஒவ்வொரு project-க்கும் "பிரச்சனை → தீர்வு" ஒரு வரி. Render மட்டும் போதாது.
- Plan + render பக்கம் பக்கமா — நீங்க சிந்தித்ததை காட்டும்.
- 10 சாதாரண projects-ஐ விட 4–5 முழுமையான projects நல்லது.
- PDF 10 MB-க்குள் — WhatsApp-ல் அனுப்ப எளிது. Instagram-க்கு தனி square crops.
- Working drawing ஒன்று கண்டிப்பா — studios அதை தான் தேடுவாங்க.
Beginners செய்யும் 10 தவறுகள்
Interior Design Career Roadmap — பொறுப்புகளுடன்
வேலை கிடைக்கும் வரை placement support (portfolio review, design tests, mock interviews, 100+ hiring partners — interior studios, builders, architects, modular furniture companies). இது உதவி; job guarantee இல்லை. சம்பளம் role, நிறுவனம், portfolio பொறுத்து மாறும்.
வழக்கமான வளர்ச்சிப் பாதை
Course
5 மாதம் · portfolio · drawing set.
Junior role
Draftsman / visualizer — drawings, renders.
Site அனுபவம்
Execution, vendors, snag lists.
Designer
Clients, full projects பொறுப்பு.
Lead / Studio
Team lead, சொந்த studio, turnkey.
ஏன் Fulcrum-ல் கத்துக்கணும்? — சரிபார்க்கக்கூடிய காரணங்கள்
🛠️ Practical Training
ஒவ்வொரு module-ம் நீங்க செய்து முடிக்கும் drawing / model / render. Demo-வில் மாணவர் files பாருங்க.🏠 Real-scale Projects
முழு 2BHK வீடு + commercial space capstone. Real client projects — Advanced course-ல்.📁 Portfolio Development
Render set, walkthrough, drawing set, boards — Module 08.💻 Industry Software
AutoCAD, SketchUp Pro, 3ds Max, V-Ray + AI tools — studios பயன்படுத்தும் வரிசையில்.👩🏫 Experienced Trainers & Mentoring
சின்ன batches, file review, தமிழ் + English விளக்கம். Online மாணவர்களுக்கு recordings, doubt sessions.📍 2014 முதல் காந்திபுரம்
எல்லா courses-லும் சேர்த்து 8000+ மாணவர்கள் placed. Google-ல் 4.9★ — reviews-ஐ நீங்களே படியுங்க.மாணவர் வேலைகள்
Demo class-க்கு வந்தா முழு project files-ஐ நேரில் பார்க்கலாம்.
காந்திபுரம் Centre — உங்க பகுதியில் இருந்து
2nd Floor, Kani Towers, No.182 D, 2nd Street, Vithu Pharmacy மேலே, Cross Cut Road, காந்திபுரம், கோயம்புத்தூர் – 641012. தூரம் அதிகம்னா live online batch.
பயண நேரங்கள் சுமாரானவை — traffic பொறுத்து. Parking உண்டு; centre 2-வது மாடி (படிக்கட்டு). திங்கள்–சனி 9:30 AM – 9:00 PM, ஞாயிறு 9:30 AM – 5:00 PM. அருகில் உள்ள வழிகாட்டி: Interior design course near me.
Interior Design Glossary — தமிழில் அர்த்தம்
- Space planning
- இடத்தை பயன்பாட்டுக்கு ஏற்ப zones-ஆ பிரித்து furniture, நடைபாதை திட்டமிடுவது.
- Circulation
- அறைகளுக்குள், இடையே மக்கள் நடக்கும் பாதை.
- Ergonomics
- மனித உடல் அளவுக்கு ஏற்ப furniture உயரம், ஆழம்.
- Floor plan
- மேலிருந்து பார்க்கும் அறையின் அளவுடன் கூடிய வரைபடம்.
- Elevation
- ஒரு சுவரை நேராக பார்க்கும் வரைபடம் — உயரங்களுடன்.
- Section
- இடத்தை வெட்டிப் பார்த்தது போன்ற வரைபடம்.
- RCP
- Reflected Ceiling Plan — ceiling design, lights இடங்கள்.
- Working drawing
- Site-ல் கட்டுவதற்கான முழு அளவு, material விவரங்களுடன் drawing.
- BOQ
- Bill of Quantities — materials, அளவு, விலை பட்டியல்.
- Mood board
- Style, நிறம், உணர்வை காட்டும் படங்கள் தொகுப்பு.
- Material board
- தேர்ந்தெடுத்த laminate, stone, fabric மாதிரிகள்.
- Render
- 3D model-லிருந்து photo போன்ற படம் உருவாக்குவது.
- Walkthrough
- இடத்துக்குள் நடப்பது போன்ற 3D video.
- False ceiling
- முதன்மை ceiling-க்கு கீழே gypsum போன்றவற்றால் அமைக்கும் ceiling.
- Cove light
- Ceiling ஓரத்தில் மறைத்து வைக்கும் LED — மென்மையான ஒளி.
- Lux / Lumens
- Lux = பரப்பில் விழும் ஒளி; lumens = விளக்கு தரும் மொத்த ஒளி.
- Colour temperature (K)
- ஒளியின் நிறம்: 2700K warm, 4000K neutral, 6500K cool.
- BWP plywood
- Boiling Water Proof — ஈரம் தாங்கும் plywood.
- HDHMR
- High Density High Moisture Resistant board.
- Edge banding
- Board ஓரங்களை மூடும் பட்டை — ஈரம், சேதம் தடுக்கும்.
- Work triangle
- Sink, stove, fridge இடையேயான கற்பனை முக்கோணம்.
- Loft
- Wardrobe / சுவர் மேல் பகுதி storage.
- Turnkey
- Design முதல் execution வரை ஒரே நிறுவனம் பொறுப்பு.
- Snag list
- Handover-க்கு முன் திருத்த வேண்டிய சிறு குறைகள் பட்டியல்.
அடிக்கடி கேட்கப்படும் 40 கேள்விகள்
Interior Design அடிப்படை
கோயம்புத்தூரில் Interior Design Course எங்கு படிக்கலாம்? எதை பார்த்து தேர்வு பண்றது?
Software மட்டும் இல்லாமல் space planning, materials, lighting, working drawings, BOQ சொல்லித் தர்றாங்களா; நீங்களே ஒரு முழு வீடு design பண்றீங்களா; portfolio கையில் வருமா — இதை பாருங்க. காந்திபுரம் Fulcrum Creative School-ல் 5 மாத (150+ மணி) course-ல் AutoCAD, SketchUp Pro, 3ds Max, V-Ray உடன் 2BHK வீடு, ஒரு commercial space project இருக்கு. Demo class வந்து மாணவர் renders-ஐ நேரில் பார்த்து முடிவு பண்ணுங்க.
Interior Design என்றால் என்ன?
ஒரு இடத்தை பயன்படுத்த வசதியாவும், பாதுகாப்பாவும், அழகாவும் திட்டமிடுவது. அளவு எடுத்து, furniture எங்கே வரும், நடக்க எவ்வளவு இடம், வெளிச்சம், electrical points, ceiling, materials, செலவு — இவற்றை drawing-ஆ தயாரித்து site-ல் செயல்படுத்துவது தான் interior design.
Interior Design-க்கும் Interior Decoration-க்கும் என்ன வித்தியாசம்?
Design = இடத்தின் அமைப்பு: space planning, furniture layout, lighting & electrical layout, ceiling, working drawings. Decoration = முடிந்த இடத்தை அலங்கரிப்பது: curtains, நிறங்கள், accessories, decor பொருட்கள் தேர்வு. Designer-க்கு decoration தெரியும்; ஆனா decorator-ஆல் working drawings தயாரிக்க முடியாது.
Interior Designer தினமும் என்ன வேலை செய்வார்?
Client-ஐ சந்தித்து brief எடுப்பது, site அளவு, AutoCAD-ல் layout, SketchUp / 3ds Max-ல் 3D, V-Ray renders, material & budget தேர்வு, carpenter / electrician-க்கான drawings, site-ல் வேலை சரியா நடக்குதா என்று பார்ப்பது.
Interior Designer-ம் Architect-ம் ஒன்றா?
இல்லை. Architect கட்டிடத்தின் அமைப்பு, structure, approvals-ஐ பார்ப்பார். Interior designer கட்டிடத்துக்குள் உள்ள இடங்களை பயன்பாட்டுக்கு ஏற்ப திட்டமிடுவார். Structural சுவர்களை மாற்ற வேண்டுமென்றால் architect / structural engineer ஆலோசனை அவசியம்.
சேருவதற்கு முன்
இந்த Course யாருக்கு?
12th முடித்தவர்கள், diploma / degree மாணவர்கள், civil engineering மாணவர்கள், architecture ஆர்வலர்கள், homemakers, வேலை பார்ப்பவர்கள், furniture business owners, contractors, carpenters, career மாற்ற நினைப்பவர்கள்.
10th முடித்தவர்கள் சேரலாமா?
Course பொதுவா 12th-க்கு பிறகு பரிந்துரைக்கப்படுது. 10th மட்டும் முடித்து interior-ல் ஆர்வம் இருந்தா counselling-ல் பேசுங்க — computer பழக்கம், உங்க இலக்கு பார்த்து சரியான வழியை சொல்வோம்.
Drawing தெரியணுமா?
தேவையில்லை. Module 01-ல் hand sketching அடிப்படை இருக்கு; ஆனா பெரும்பாலான drawings AutoCAD, SketchUp-ல் தான். அளவுகளை சரியா புரிஞ்சுக்கறது ஓவியத் திறமையை விட முக்கியம்.
Computer அதிகம் தெரியாது. சமாளிக்க முடியுமா?
Mouse, keyboard, files save பண்ணத் தெரிஞ்சா போதும். ஒவ்வொரு software-ம் அடிப்படையில் இருந்து தான். தினமும் 1 மணி நேர practice இருந்தா வேகம் வரும்.
Civil Engineering மாணவர்களுக்கு இது பயனுள்ளதா?
ஆம். Civil படிப்பில் கிடைக்கும் drawing, அளவு அறிவோடு 3D modelling, V-Ray rendering, interior working drawings, BOQ சேர்ந்தா builders, interior firms-ல் வாய்ப்புகள் அதிகம்.
Furniture business / carpenter-ஆ இருக்கேன். உதவுமா?
நிறைய. Customer-க்கு வேலை ஆரம்பிக்கும் முன்பே 3D render காட்டினா order உறுதி ஆகும்; சரியான working drawings இருந்தா workshop-ல் தவறு குறையும்.
Homemaker-ஆ இருக்கேன். இது career ஆகுமா?
ஆகலாம். பலர் சொந்த வீடு, உறவினர் வீட்டில் ஆரம்பித்து freelance-ஆ வளர்க்கிறாங்க. Weekend அல்லது weekday batch உங்க நேரத்துக்கு ஏத்த மாதிரி தேர்ந்தெடுக்கலாம்.
வகுப்புகள் தமிழில் நடக்குமா?
ஆம். விளக்கம் தமிழ் + English-ல. Software menus, technical terms English-லயே இருக்கும் — இந்தப் பக்கத்தின் glossary அதற்கு உதவும்.
Course, Software & Fees
Course Duration எவ்வளவு?
5 மாதம் — 20 வாரம், 150+ மணி நேரம், 8 modules. Weekday காலை, மாலை, weekend batches உண்டு; weekend batch-ம் 5 மாதம், அதே syllabus.
Offline-ஆ Online-ஆ?
இரண்டும் உண்டு. காந்திபுரம் centre-ல் classroom, அல்லது Google Meet-ல் live online batch. Online மாணவர்களுக்கு class recordings, doubt-clearing sessions, அதே placement support.
AutoCAD கற்றுக்கொடுக்கிறீர்களா?
ஆம். Module 02 (வாரம் 3–5): floor plans, furniture layout, sections, elevations, ceiling plans, scales, plotting. Module 06-ல் kitchen, wardrobe, ceiling, electrical working drawings.
SketchUp இருக்கா?
ஆம். Module 03-ல் SketchUp Pro — rooms, custom furniture, materials, scenes, walkthroughs, LayOut presentation sheets.
3D Design கற்றுக்கொடுக்கிறீர்களா?
ஆம். SketchUp-ல் வேகமான 3D concepts, 3ds Max-ல் detailed furniture, decor modelling, V-Ray-ல் photo-real day & night renders.
Photoshop, Enscape இருக்கா?
Core syllabus AutoCAD, SketchUp Pro, 3ds Max, V-Ray. Render edit-க்கு Adobe Firefly, fast concept renders-க்கு Chaos Veras AI tools module-ல் இருக்கு. Photoshop, Enscape தனியா முழு module-ஆ இல்லை — தேவைப்பட்டா counselling-ல் கேளுங்க.
AI tools இருக்கா?
ஆம். Module 07: Midjourney mood boards, RoomGPT / Planner 5D redesign ideas, Chaos Veras concept renders, ChatGPT proposals. ஆனா அளவு, layout, drawings, budget எல்லாம் இன்னும் உங்க கையில் தான்.
Vastu பற்றி சொல்லித்தருவீங்களா?
ஆம், Module 01-ல் Vastu அடிப்படை — தமிழ்நாட்டில் பல clients கேட்பதால் layouts-ல் எப்படி சேர்ப்பது என்று.
Fees எவ்வளவு? EMI உண்டா?
Batch, format பொறுத்து — தற்போதைய கட்டணத்துக்கு 93608 99780-ல் அழைக்கவும் அல்லது WhatsApp பண்ணுங்க. 6 மாதம் வரை EMI உண்டு. விவரங்கள்: Interior design course fees பக்கம்.
Laptop சொந்தமா வேணுமா?
Centre lab-ல் practice பண்ணலாம். Online batch அல்லது வீட்டு practice-க்கு laptop தேவை — 3ds Max, V-Ray-க்கு நல்ல RAM, graphics card வேணும். வாங்கும் முன் counselling-ல் configuration கேளுங்க.
Certificate கிடைக்குமா?
ஆம், Fulcrum Creative School Interior Design course completion certificate. ஆனா clients, employers பார்ப்பது உங்க portfolio, drawing set, renders தான்.
Practical, Projects & Portfolio
Practical Training இருக்கா?
ஆம், பெரும்பாலான நேரம் software-ல் கையால செய்வது தான். ஒவ்வொரு module-ம் ஒரு drawing, model அல்லது render-ஆ முடியும்.
Live Projects இருக்கா?
5 மாத course-ல் capstone-ஆ ஒரு முழு 2BHK வீடு + ஒரு commercial space — brief முதல் renders, working drawings, BOQ வரை. உண்மையான client projects வேண்டுமென்றால் 8 மாத Advanced Interior Design course-ல் உண்டு.
Site Visit இருக்கா?
Site measurement, drawings site-ல் எப்படி பயன்படுது, execution workflow — course-ல் விரிவா கற்பீங்க. உங்க batch-ல் நேரடி site visit திட்டமிடப்பட்டிருக்கா என்று counselling-ல் உறுதி செய்யுங்க.
Portfolio Build பண்ணுவீங்களா?
ஆம். Module 08-ல் floor plans, furniture layouts, V-Ray render set, walkthrough, working drawing set, mood & material boards — PDF portfolio-ஆ தயாராகும்.
Modular kitchen, wardrobe design இருக்கா?
ஆம், Module 06-ல் modular kitchen, wardrobe detailing, false ceiling, electrical layouts, material schedules, quantity estimates.
BOQ என்றால் என்ன? அதுவும் கற்பீங்களா?
Bill of Quantities — ஒரு project-க்கு தேவையான materials, அளவு, விலை பட்டியல். Client-க்கு quotation, contractor-க்கு வேலை அளவு இதிலிருந்து தான். Module 06-ல் கற்பீங்க.
Commercial interiors (office, shop, restaurant) கற்பீங்களா?
ஆம். Office workstations, cabins, retail showrooms, cafes-க்கு space planning, lighting, branding சேர்ப்பு — capstone-ல் ஒரு commercial space முழுசா design பண்ணுவீங்க.
Career & Freelancing
Interior Design Career நல்லதா?
புதிய வீடுகள், renovation, shops, offices, cafes — interior வேலை தொடர்ந்து தேவைப்படுது. ஆனா வெற்றி உங்க portfolio, drawings-ன் துல்லியம், client-ஐ கையாளும் திறன், site அனுபவம் பொறுத்தது. விரிவா: Is interior design a good career பக்கம் பாருங்க.
Course முடிச்சா வேலை கிடைக்குமா?
வேலை கிடைக்கும் வரை placement support — portfolio review, design tests, mock interviews, interior studios, builders, architects, modular furniture companies உட்பட 100+ hiring partners-க்கு referrals. இது support தான், job guarantee இல்லை.
என்ன வேலைகள் கிடைக்கும்?
Interior Designer, Interior Draftsman, 3D Visualizer, Space Planner, Kitchen Designer, Furniture Designer, Design Consultant, Site Coordinator, Freelance Interior Designer, சொந்த design studio.
Freelancing செய்ய முடியுமா?
முடியும். நண்பர்கள், உறவினர் வீடுகள், சின்ன shops-ல் ஆரம்பித்து, AutoCAD plan + V-Ray render காட்டி orders வாங்கலாம். Pricing, presentation Module 08-ல் இருக்கு. இந்தப் பக்கத்தின் Client Meeting Checklist-ம் பயன்படும்.
எவ்வளவு சம்பளம் கிடைக்கும்?
Role, நிறுவனம், ஊர், portfolio பொறுத்து பெரிதா மாறும். ஆரம்பத்தில் draftsman / visualizer ஆக ஆரம்பித்து அனுபவத்தோடு designer, project lead ஆக வளர்வது பொதுவான பாதை.
Course-க்கு பிறகு என்ன படிக்கலாம்?
8 மாத Advanced Interior Design course — real client projects, Corona Renderer உட்பட. Walkthrough films-க்கு Animation course, கட்டிட வடிவமைப்புக்கு Building Design course.
இடம் & வகுப்புகள்
Centre எங்க இருக்கு?
2nd Floor, Kani Towers, No.182 D, 2nd Street, Vithu Pharmacy மேலே, Cross Cut Road, காந்திபுரம், கோயம்புத்தூர் – 641012. Gandhipuram bus stand-ல் இருந்து நடந்தே வரலாம்.
RS Puram, Peelamedu, Saravanampatti-ல இருந்து வர முடியுமா?
முடியும். Ganapathy-ல் இருந்து சுமார் 10–15 நிமிஷம், RS Puram / Saibaba Colony 15–20, Peelamedu / Avinashi Road 20–25, Singanallur / Vadavalli 25–35, Saravanampatti 30–40 நிமிஷம் — traffic பொறுத்து. தூரம் அதிகம்னா live online batch இருக்கு.
Demo Class இலவசமா? Timings என்ன?
ஆம், இலவச demo class + counselling. Centre திங்கள் – சனி காலை 9:30 – இரவு 9:00, ஞாயிறு காலை 9:30 – மாலை 5:00. Parking இருக்கு; centre 2-வது மாடி, படிக்கட்டு மட்டும்.
முக்கிய குறிப்புகள் & அடுத்த படி
- Interior design = space planning + function + lighting + materials + drawings; decoration அதன் ஒரு பகுதி.
- Software (AutoCAD → SketchUp → 3ds Max → V-Ray) கருவிகள் மட்டுமே; அளவு, layout, budget-ஐ புரிஞ்சுக்கறது தான் skill.
- 5 மாத course முடிவில்: 2BHK + commercial project, render set, working drawings, portfolio.
- வேலை, freelance — இரண்டுக்கும் portfolio-வும் துல்லியமான drawings-ம் தான் நம்பிக்கை தரும்.
Campus-க்கு வந்து பாருங்க
இலவச demo class-ல் மாணவர் floor plans, V-Ray renders பாருங்க, course counsellor-ஐ சந்தித்து batch, fees, online option பற்றி பேசுங்க. எந்த கட்டாயமும் இல்லை.
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: நவம்பர் 2026 · Fulcrum Creative School, Interior Design faculty · அளவுகள், lighting எண்கள் பொதுவான வழிகாட்டல்கள்; fees, batch நேரங்கள் மாறலாம் — சேரும் முன் உறுதி செய்யவும்.